மனிதர்களின் நிலை
வேர்களை தேடி
Saturday, November 21, 2015
அழகாக சிவந்த நிறமாக உள்ள ஆண்களையும் பெண்களையும் கூர்ந்து கவனியுங்கள் அவர்களில் பலர் பெரும்பாலும் பார்வைகளை தாழ்த்திக் கொள்வதில்லை தன் அழகை அனைவரும் ரசிக்கவேண்டும் என்று விருப்பம் அவர்களின் அடிமனதில் அதிகமாக இருக்கிறது அழகானவங்களை கல்யாணம் பண்றவங்க எப்போதுமே மகிழ்ச்சி யாக இருக்குறதேயில்லை தன் பணம் தன் அழகினால் மற்றவர்கள் தன்பின்னே சுற்றணும் என்றே நினைக்கிறார்கள் ஏன் இப்படி இருக்குறாங்க அழகாக இருப்பதனால் அல்லாஹ்க்கு நன்றி செலுத்தனும் அப்படிலாம் செய்றதேயில்லை தன் ஆடை அலங்காரங்களை பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்து கொள்கிறார்கள் மற்றவர்கள் இவர்களின் அழகை வாய் பிளந்து ரசிப்பதானால் இவர்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன ஒரு அழகான பெண் கணவருக்கு பணிவிடை செய்யமாட்டாள் அதே மற்றவருக்கு செய்வாள் தான் புகழப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக அழகாக உள்ளவர்கள் அதிகமாக பொய்யும் பேசுகிறார்கள் அதை பெரிய தவறாகவும் அவர்கள் நினைப்பதில்லை திருமண சந்தையிலோ பெரிய அலுவலகத்திலோ அழகானவர்கள் ஈசியாக எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் தன்னிடம் சொல்லப்படும் அத்தனை காதல் விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள் அதை பெரும் வரமாக நினைக்கிறார்கள் ஆனால் அத்தனை பேருக்கும் அவர்களால் உண்மையாக இருக்கமுடிவதில்லை அழகு எப்போதுமே ஆபத்துதான் இது ஒரு ஜாலியான ஆனால் உண்மையான ஆராய்ச்சி நீங்களும் கூர்ந்து கவனிங்க
கவிதை
அல்லாஹ் பார்க்கிறான்
ஒங்வொன்றையும்
நமது செயல்களின் அழகை
நாம் மன இச்சையில் இருக்கின்றோமா?
தெளிவான பாதையில் இருக்கின்றோமா?
நமது லட்சியம் என்னவாக இருக்கிறது
என்ற அடிப்படையில் நமக்கு கூலி வழங்கப்படுகிறது
Tuesday, November 3, 2015
இயற்கை மார்க்கம்
ஒவ்வொரு மனிதனும் இயற்கையான மார்க்கத்தில் பிறக்கின்றான்.
அதாவது இறைவன் ஒருவனே
என்ற கொள்கை அவன் மனதில் ஆளமாக ஊடுருவியே காணப்படும்
ஆனால் தன் பெற்றோர் மூலமாகவே
அவன் விவரமாக தெரிந்து கொள்கிறான்.
அதன் மூலம் மரத்தையோ
சிலைகளையோ சமாதிகளையோ நெருப்பையோ
அல்லது
ஒரே இறைவனையோ வணங்க ஆரம்பிக்கின்றான்!
அவன் மனதில் இறைவனை பற்றிய தேடுதல்
தோன்றினாலும் ஒரே இறைவனை தேடிஅடைந்து விடுகிறான்!!!
Saturday, October 31, 2015
அல்குர்ஆனில்
அல்குர்ஆன் இறைவனின்
அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
வாழும் காலம் முழுதும்
பணம் பணம் என்று தேடியலையும்
மனிதன் நிம்மதியையும் தேடி
அலைகிறான்!
படைத்தவனை அடையாமல்
அவன் எவ்வாறு நிம்மதி பெற இயலும்?
அவனை வணங்குவது
அவன் பெயரை தியாகம்
செய்வது நிம்மதி பெற சிறந்த வழி
மற்றொன்று மனிதர் மீது இரக்கம்
கொள்வது